உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற அணிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன்.

மாபெரும் மகளிர் கபடி போட்டி

Published On 2023-08-29 07:33 GMT   |   Update On 2023-08-29 07:33 GMT
  • மகளிர் கபடி போட்டியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
  • இரு அரை இறுதி போட்டியில் கோபிசெட்டிபாளையம் அணியும், அந்தியூர் அணியும் வெற்றி பெற்றது.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, பீகார், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

பிரமாண்ட கேலரியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்திருந்தது கைதட்டியும், விசில் அடித்தும், ஆரவா ரத்துடன் போட்டியை கண்டுகளித்தனர். இரவில் நடந்த இரு அரை இறுதி போட்டியில் கோபிசெட்டி பாளையம் அணியும் அந்தியூர் அணியும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதில் கோபிசெட்டி பாளையம் 27 புள்ளிகள் பெற்றது. அந்தியூர் அணி 37 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து முதல் பரிசை அந்தியூர் பள்ளி மாணவிகளும், 2-வது பரிசை கோபிசெட்டி பாளையம் கல்லூரி மாணவிகளும், 3-வது பரிசை மேற்கு ெரயில்வேயும் 4-வது பரிசை சென்னையும் பெற்றது.

வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 2 லட்சமும், 2-வது பரிசாக ரூ.1.50 லட்சமும், 3-வது பரிசாக ஒரு லட்சமும், 4-வது பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பைகள் சிறப்பு பரிசுகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அந்தியூர் அணியில் 34 முறை பிடிபடாமல் சென்ற கவுந்தர்யாவை அமைச்சர் மற்றும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.

இந்த போட்டியில், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலா ளருமான சண்முக வடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News