உள்ளூர் செய்திகள் (District)

 புதிய ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னை தெரசா சொரூபத்தையும், திறப்பு விழாவில் பங்கேற்ற பொதுமக்களையும் படத்தில் காணலாம்.

சிவகங்கையில் புனித அன்னை தெரசா ஆலயம் திறப்பு

Published On 2023-09-29 08:30 GMT   |   Update On 2023-09-29 08:30 GMT
  • தமிழகத்தில் முதல் முறையாக சிவகங்கையில் புனித அன்னை தெரசா ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
  • திறப்பு விழாவில் சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கலந்து கொண்டார்.

சிவகங்கை

சிவகங்கை அருகே வல்லனி என்ற இடத்தில் ரூ.4.5 கோடி மதிப்பில் தமிழ கத்தில் முதல் முறையாக மிகப்பிரமாண்டமாய் அன்னை தெரசா ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

மதுரை உயர் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோனி பாப்புசாமி ஆலயத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தினார். சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசைமாணிக்கம், 100-க்கும் மேற்பட்ட அருட் தந்தைகள் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலயத்தை எழில்மிகு வண்ணத்துடன் அன்னை தெரசா ஆலயத்தின் பங்குத்தந்தை லூர்து ராஜ் மேற்பார்வையில் கட்டப்பட்டு உள்ளது. அன்னை தெரசா விற்காக தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் ஆலயம் என்பதால் இது மத நல்லிணக்க நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் விழா கோலம் கொண்டிருந்தது.

திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு அந்த தேவாலயம் வண்ண மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திறப்பு விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவில் சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்நாதன் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News