- சிவகங்கையில் சுதந்திர தினவிழா ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு, சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.
சுதந்திர தினவிழாவை காண்பதற்காக வரும் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர் வசதி, போக்கு வரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டடார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பாதேவி உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.