திருப்பத்தூரில் கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
- மருது பாண்டியர்களின் நினைவு தினம் திருப்பத்தூரில் கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தனர்.
- சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகின்ற 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதனை முன்னிட்டு போக்குவரத்து நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மருது பாண்டியர்களின் வாரிசுதாரர் ராமசாமி,திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலிகான், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, திருப்புத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வபிரபு, சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.