உள்ளூர் செய்திகள்

தெக்கூர் கல்லூரியில் மாநிலக் கல்வி கொள்கை குழுவின் தலைவர்- முன்னாள் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முருகேசன் மாணவர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார்.

தெக்கூர் கல்லூரி மாணவர்களிடம் நீதிபதி கருத்து கேட்டார்

Published On 2023-02-24 08:05 GMT   |   Update On 2023-02-24 08:05 GMT
  • மாநில கல்வி கொள்கை குறித்து தெக்கூர் கல்லூரி மாணவர்களிடம் நீதிபதி கருத்துகளை கேட்டறிந்தார்.
  • இதில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

தமிழக அரசு மாநில அளவில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கருத்துருவை தயாரிப்பதற்கான குழுவை நியமித்துள்ளது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குழுவின் தலைவர்-முன்னாள் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முருகேசன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் அ.தெக்கூரில் உள்ள சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை புரிந்து மாணவ, மாணவிகளை சந்தித்து தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறையை பற்றி கருத்துக்களை கேட்டறிந்தார்.

கிராமப்புறத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் தற்போது நடைமுறையில் உள்ள கற்றல், கற்பித்தல் முறைகள், தேர்வு முறைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடிய போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்போது நடைபெற்று வரும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள், பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள், ஆசிரியர் -மாணவர் உறவு முறை ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கையாள்வது?, பாடங்களை புரிந்து படித்து தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது என்ற வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை நீதிபதி தெரிவித்தார்.

பின்னர் கல்லூரி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் கல்வி தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து அறிவுரை வழங்கி, கல்லூரி நிர்வாகத்தினரிடம் கலந்துரையாடி கல்லூரி நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது?, கல்லூரியின் தரத்தை முன்னேற்றம் அடையச்செய்வது பற்றி ஆலோசனை வழங்கினார்.

இதில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News