கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் விரைவில் திறக்கப்படும்-அமைச்சர் தகவல்
- மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் விரைவில் திறக்கப்படும்.
- இந்த தகவலை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் சங்க கால புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பிரபலமான வரிகளால் அறியப்படுபவர் கணியன் பூங்குன்றனார்.
இவர் மகிபாலன்பட்டி கிராமத்தில் வாழ்ந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்தநிலையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கணியன் பூங்குன்ற னாருக்கு மகிபாலன் பட்டியில் ரூ.21.02 லட்சம் மதிப்பீட்டில் நினைவுத்தூண் அமைக்கும் பணி முடிந்துள் ளது.
இந்த நிலையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வ ராஜ், கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகிபாலன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு ெகாண்டு வரப்படும். சுங்கச்சாவடியில் பத்திரிகையாளர்கள் கட்டணமின்றி பயணிக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் அறிவிக்கப் பட்ட நலத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் வாளுக்கு வேலி அம்பலத்திற்கு சிலை அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் நிறுவப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நெற்குப்பை சேர்மன் பழனியப்பன், கூட்டமைப்பு தலைவர் மாணிக்கவாசகம், ஊராட்சி தலைவர் பாஸ்கரன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் நாகராசன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் விஜய பாஸ்கர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.