உள்ளூர் செய்திகள்

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் நடந்தது. அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி மற்றும் பலர் உள்ளனர்.

மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆலோசனை

Published On 2023-03-12 08:27 GMT   |   Update On 2023-03-12 08:27 GMT
  • மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆலோசனை நடந்தது.
  • பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடந்தது.

இதில் தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், பிரதமரின் பசல் பீமா யோஜனா, சமக்ர சிக்சா, தேசிய சமூக உதவித் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம், தீன்தயாள் உபாத்தியாய்-அந்தியோதயா யோஜனா, சத்துணவுத் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம்-கிராமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், தேசிய ரூர்பன் திட்டம், பிரதமரின் ஆதர்ஸ் கிராம் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய, மாநில அரசின் துறைகள் ரீதியாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.

இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை களையும் முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரை செய்து, நிதி மற்றும் சலுகைகளை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் வெண்ணிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சேகர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News