உள்ளூர் செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம்

Published On 2023-10-14 08:03 GMT   |   Update On 2023-10-14 08:03 GMT
  • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
  • நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

காளையார்கோவில்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் கீழ்கரையில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். அமைச்சர்கள் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசுகிறார்கள்.

இதில் பாகமுகவர்களுக்கு செல்போன் கழக முன்னோடிகளுக்கு நிதி உதவி, தொண்டு நிறுவனங்களுக்கு அரிசி மூட்டைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. 7 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொள்கி றார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News