உள்ளூர் செய்திகள்

காசி விஸ்வநாதர் கோவில் முன்பு தர்ப்பணம் செய்யும் பக்தர்கள்.

முன்னோர் வழிபாடு நடைபெறும் காசி விஸ்வநாதர் கோவில்

Published On 2023-01-14 08:25 GMT   |   Update On 2023-01-14 08:25 GMT
  • மானாமதுரை அருகே முன்னோர் வழிபாடு நடைபெறும் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்யலாம்.
  • காசியில் எப்படி உள்ளதோ அதே போல் பக்தர்களே கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை தொட்டு வணங்கலாம்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேபரமக்குடி சாலையில் உள்ள குறிச்சியில் வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் 10 ஆண்டு களுக்கு முன்பு காசியில் இருந்து பூஜித்து காசி விஸ்வநாதர், அன்னபூரணி, தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, அனுமன், நந்தி மற்றும் சீரடி சாய் பாபா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

காசியில் எப்படி உள்ளதோ அதே போல் பக்தர்களே கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிவனை தொட்டு வணங்கலாம். கோவிலில் உள்ள வில்வம், வன்னி, மாமர இலைகளை வைத்தும் பூஜை செய்யலாம்.

இக்கோவிலை கட்ட ஏற்பாடு செய்த இந்த கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி ஆண்டுக்கு 5 முறை காசி சென்று தங்கி தாய், தந்தை மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறார்.

பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நம் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் காசியில் எப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்களோ அதுபோல தமது சொந்த ஊரில் அனைவரும் காசி விஸ்வநாதர் அருளால் முன்னோர்கள் ஆசியை பெற வேண்டும் என காசி விஸ்வநாதர் கோவிலை உருவாக்கி உள்ளார்.

இங்கு தை, ஆடி, மாஹாளயம் (புரட்டாசி) ஆகிய அமாவாசை தினங்களில் காலை 7 மணி முதல் 11 மணிவரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது தவிர பிரதோஷம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சித்திரை திருவிழா 10 நாட்கள் மற் றும் குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, நவகிரக யாகங் களும் நடைபெறுகிறது.

முன்னோர்கள் ஆசி கிடைக்க பக்தர்களுக்கு தர்ப்பண பொருட்கள் எள், அகத்தி கீரை, பூ ஆகியவைகளை கோவில் நிர்வாகிகள் இலவசமாக வழங்கி வரு கின்றனர். காசி செல்ல முடியாத பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட காசி விஸ்வநாதரை கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்யலாம்.

Tags:    

Similar News