கபடி போட்டியில் கிட் அண்ட் கிம் கல்லூரி அணி சாதனை
- அண்ணா பல்கலைக்கழக கபடி போட்டி நடந்தது.
- கிட் அண்ட் கிம் கல்லூரி அணி சாதனை படைத்துள்ளனர்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட கிம் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16-வது மண்டலத்திற்கான ஆண்கள் கபடி போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து 21 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடந்த போட்டி களில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமராவதிபுதூர் ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி அணியும், புதுக்கோட்டை மதர் தெரசா கல்லூரி அணியும் விளை யாடின. இதில் 15 புள்ளி வித்தி யாசத்தில் வெற்றி பெற்று ராஜ ராஜன் கல்லூரி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
2-ம் அரையிறுதி ஆட்டத்தில் மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரி அணியும், செந்தூரான் அணியும் விளையாடி கிட் அண்ட் கிம் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பான இறுதி போட்டியில் ராஜ ராஜன் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.
இதில் கிட் அண்ட் கிம் கல்லூரி அணியும் சிறப்பாக விளையாடி பாராட்டை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கிட் அண்ட் கிம் கல்லூரி தலைவர் அய்யப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இதில் கல்லூரியின் இயக்குனர் ஜெயராஜா, முதல்வர் பார்த்தசாரதி, உடற்கல்வி இயக்குனர் பழனியப்பன், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.