- மானாமதுரை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பக்தர்கள் மீது பைப்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாந்தநாயகி அம்பாள் சமேத சொர்ணவாரீசுவரர் கோவிலில் மகா கும்பாபிஷே விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கோவில் அருகே பிரமாண்ட யாகசாலை அமைத்து மூலவர் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மூலவர் விமான கலசங்கள் மற்றும் பரிவார விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். நிறைவாக கலசத்திற்கு பட்டு வஸ்திரம், பூ மாலை சாற்றி ஏக முக கற்பூர ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் பக்தர்கள் மீது பைப்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம், மானாமதுரை பிரித்தியங்கிரா கோவில் சுவாமி ஞானசேகரன், ஸ்தபதி சண்முகம், சிவகங்கை தேவஸ்தானம் ராணி மதுராந்தக நாச்சியார், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ராஜ்குமார், துணைத்தலைவர் சிவகாமி ராஜிபிள்ளை, கிராம நிர்வாகிகள் கருப்பையா, ரமேஷ் சுவாமி, முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். செல்லப்பா குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி. நமச்சிவாயம், டி.எஸ்.பி.கண்ணன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், சார்பு ஆய்வாளர் பூபதி ராஜா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.