உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்றவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், போக்குவரத்து கழக பொதுமேலாளர் சிங்காரவேலு ஆகியோர் பரிசு வழங்கினர். அருகில் போக்குவரத்து கழக துணைபொதுமேலாளர்கள் நாகராஜன், நலங்கிள்ளி, தமிழ்மாறன் உள்ளனர்.

சட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Published On 2023-10-08 08:38 GMT   |   Update On 2023-10-08 08:38 GMT
  • அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடந்தது.
  • முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1500-ம், 3-ம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

காரைக்குடி

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்ப கோணம்) லிட். காரைக்குடி மண்டலம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005, விழிப்புணர்வு வாரத் தை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை உதவி காவல் கண்காணிப் பாளர் ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழக காரை க்குடி பொது மேலாளர் சிங் காரவேலு ஆகியோர் காரைக்குடியில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார மாக கொண்டாடும் வகை யில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் காரைக்குடி மண்டலம் சார் பில் தலைமை அலுவலகம் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் தகவல் அறி யும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்டல தலை மை அலுவலகத்திலும் கிளை அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் மாரத்தான் போட்டி நடை பெற்றது.

இந்த மாரத்தான் போட்டி யில் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் , காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் பயிற்சி பெறும் பணியாளர் கள் பங்கேற்றனர்.

காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கி சூடாமணிபுரம் , அழகப்பா பல்கலைக்கழகம், ஆரியபவன் உணவகம் வழியாக காரைக்குடி நக ராட்சி அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடை பெற்றது.

இந்த மாரத்தான் போட்டி யில் வெற்றி பெற்றவர் களுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1500-ம், 3-ம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் (வணிகம்) நாகராஜன், (தொழில்நுட்ப ம்) நலங்கிள்ளி , (நிர்வாகம்) தமிழ்மாறன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திர வேல் உள்பட போக்குவரத் துக் கழக அலுவலர்கள் மற் றும் பணியாளர்கள், காவல் துறை, மருத்துவத்துறை, அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News