உள்ளூர் செய்திகள் (District)

அழகப்பா கல்வி குழும தலைவர் டாக்டர் ராமநாதன் வைரவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Published On 2023-09-29 08:14 GMT   |   Update On 2023-09-29 08:14 GMT
  • அழகப்பா கல்வி குழும தலைவர் டாக்டர் ராமநாதன் வைரவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • சமுதாயத்துக்குப் பயனளிக்கும் நோக்கத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

காரைக்குடி

அமெரிக்காவில் தலை மைத்துவ மற்றும் தொழில் நுட்ப மாநாட்டின் போது விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பல்வேறு முன்னணி தொழில் முனை வோர், முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

தொழில்முனைவோரும், கல்வியாளரும், காரைக்குடி அழகப்பா கல்வி குழும தலைவருமான டாக்டர்.ராமநாதன் வைரவனுக்கு கல்வி, கலை மற்றும் புரவலர் ஆகியவற்றில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப் பட்டது.

டாக்டர் வைரவன், வள்ளல் டாக்டர் ஆர்.எம் அழகப்ப செட்டியாரின் பேரன் ஆவார். சுகாதாரத் துறையில் நாற்பது ஆண்டு களுக்கும் மேலாக புகழ்பெற்ற தொழில்களை திறம்பட நடத்திக்கொண்டு வருகிறார். பன்னாட்டு நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளை வகித்தவர்.

காரைக்குடியில் உள்ள டாக்டர் அழகப்ப செட்டி யார் கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னையில் உள்ள அசோகா அறக் கட்ட ளை ஆகியவற்றின் தலைவர் செயலாளராக, டாக்டர் வைரவனின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை, கல்வி மற்றும் புரவலராக சாதனை களை புரிந்துள்ளதை, பல்வேறு கல்வி நிலைகளில் பயின்ற 8000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மேம்பாடுகளில் அறிந்து கொள்ளலாம்.

விருது வழங்கும் விழா வில் டாக்டர் ராம நாதன் வைரவன் பேசுகை யில், 47 ஆண்டுகளில், காரைக் குடியின் மாற்றத்தில் என் தாத்தா டாக்டர் அழகப்ப செட்டியார் ஒரு அழியாத தடம் பதித்தார்.அவர் தனது 1000 ஏக்கர் காடுகளை பல கல்வி நிறுவனங்களை உரு வாக்க நன்கொடையாக வழங்கினார். இது 3 மில்லி யனுக்கும் அதிகமான மாண வர்கள் உருவாக்க வழி வகுத்தது. மேலும் பெண்கள் கல்லூரியை நிறுவ தனது பங்களாவைக் நன்கொடை யாக அளித்து ஒரு சாதாரண கூட அறையில் வசித்து வந்தார். தொழில் முனை வோர்கள், சமுதாயத்திற்குத் திரும்ப கொடுக்கும் அர்ப் பணிப்பு உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். காரைக்குடியில் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆயுர்வேத கல்லூரியை உருவாக்கி, கல்வித் துறையை மேலும் மேம்படுத்தி. சமு தாயத்துக்குப் பயனளிக்கும் நோக்கத்தில் இருக்கிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News