உள்ளூர் செய்திகள்

ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு ரூ.12 கோடி மதிப்பில் கடனுதவிகள்

Published On 2023-08-13 06:27 GMT   |   Update On 2023-08-13 06:27 GMT
  • ஊராட்சி கூட்டமைப்புகளுக்கு ரூ.12 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டது.
  • ஊராட்சி உறுப்பினர் சாந்தா சகாயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இளைஞர் திறன் திருவிழா மற்றும் கடனுதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளையும், ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்கு வங்கி கடனு தவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசிய தாவது:-

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெற்று பெற்று வருகிறார்கள்.அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியவைகள் இணைந்து, வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா சிறப்பாக சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மொத்தம் 102 தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 13 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்பட 347 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள் ளது. பல்வேறு போட்டி தேர்வு களில் பங்கு பெறுவதற்கு இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மொத்தம் 24 ஊராட்சிகளை சேர்ந்த கூட்டமைப்பிற்கு மொத்தம் ரூ.12 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டுள் ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) தேவேந்திரன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலட்சுமி, சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் இந்திரா, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை, சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தா சகாயராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News