மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- அமைச்சர் பெரியகருப்பன்
- மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்
- சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டை கிராமத் தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்ட சத்து பெட்டகங்களையும் அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 முகாம் களை நடத்திட உத்தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மொத்தம் 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 2-வது முகாம் நடந்துள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு நோய்களுக்கான தன்மையை கண்டறிந்து அதுக்கான உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உடல்நலம் சார்ந்த பரிசோதனைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதிவாணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், சன் சீமான் சுப்பு, ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஷ்வரி காளிதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, ஏரியூர் மருத்துவர் பிரேம்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்