உள்ளூர் செய்திகள்

பிரான்மலையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சுப்பிரமணியின் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அருகில் கலெக்டர் ஆஷா அஜீத், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.

மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படுகிறது

Published On 2023-09-08 07:30 GMT   |   Update On 2023-09-08 07:30 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
  • கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் முடிவுற்ற சுகாதார திட்ட பணிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் பெரிய கருப்பன், சுப்பிரமணியன் கலந்து கொண்டு பயன்பாட் டிற்கு திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் இளையான்குடி ஆகிய பகுதிகளில், ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு, செவிலியர் குடியிருப்பு, துணை செவிலியர் மற்றும் தாதியர் பயிற்சிப்பள்ளி கூடுதல் விடுதி, ஆய்வக கூடுதல் கட்டிடங்கள் ஆகியவைகளை ஒருங்கி ணைத்து, இந்நிகழ்ச்சியின் வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கென புதிய கட்டி டங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மருத்துவம் மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு பிரிவு கட்டிடமும், இது தவிர ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடமும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் முத்தனேந்தல் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடமும், ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் செஞ்சை - நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் முத்துப்பட்டிணம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் தேவகோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாரநாடு, விராமதி, புளியால் ஆகியவைகளில் தலா ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 6 துணை சுகாதார நிலை யங்கள் மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தை கள் பிரிவு கட்டிடம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம் ஆகிய மருத்துவ சேவைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாங்குடி எம்.எல்.ஏ., ஆவின் பால்வள தலைவர் சேங்கை மாறன், பிரான்மலை ஊராட்சி மன்றத்தலைவர் ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News