புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.
- புதிய பஸ் சேவையை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தேவகோட்டை
தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை ஊராட்சியில் கள்ளிக்குடி கிராமம் உள்ளது. மருத்துவர்கள், பேராசிரியர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் முக்கிய அரசியல் பிரமு கர்கள் என பல்வேறு தரப்பினரை உருவாக்கிய இந்த கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது.
இதனால் அந்த கிராம மக்கள் தங்களின் கிரா மத்துக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அங்கிந்து தேவகோட்டை நகருக்கு புதிய பேருந்து சேவையை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் முன்னி லையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்தானது தேவகோட்டையில் இருந்து புலியடிதம்மம் செல்லும் போது எழுவன்கோட்டை, ஈகரை வழியாக கள்ளிக்குடி கிராமத்திற்கு வந்து புதுக்கோட்டை பெரிய காரை மற்றும் வேலாயுத பட்டினம் வழியாக புலியடி தம்மம் செல்கிறது.
மேலும் இதே மார்க்கமாக தேவகோட்டைக்கு காலை மாலை ஆகிய இரு வேளைகளில் செல்கிறது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பூமிநாதன், போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல மேலாளர் சிங்காரவேல், வர்த்தக பிரிவு மேலாளர் நாகராஜன் கிளை மேலாளர் சொக்கலிங்கம், பொறி யாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்த அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.