அரசு பள்ளிகளில் புதிய நூலகம்- கூடுதல் வகுப்பறை கட்டிடம்
- அரசு பள்ளிகளில் புதிய நூலகம்- கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
- இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அனுமந்தக்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற நிதியிலிருந்து கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்ச ருமான ப.சிதம்பரம் கல்வெட்டுகளை திறந்து வைத்து ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றினார்.
உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் உடன் இருந்தனர். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை திமுக நகரச் செயலாளர் பாலமுருகன், காங்கிரஸ் நகர செயலாளர் வழக்கறிஞர் இரவுசேரி சஞ்சய், கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வடக்கு, தெற்கு வட்டார காங்கிரஸ் புகழேந்தி, இளங்குடி முத்துக்குமார் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதே போல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.2.78 லட்சம் மதிப்பிலான மகாத்மா காந்தி நூலகத்தை ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி துணை தலைமை ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.