- கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் வழிகாட்டி செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ மனைக்கு மெண்டர் செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு தேவையான செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்வதற்கு பதிலாக அங்கு புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை தோற்றுவித்து அதில் பணி நிரந்தரத்திற்காக காத்திருக்கும் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.