உள்ளூர் செய்திகள்

பனை விதை நடவு விழா

Published On 2023-11-05 07:39 GMT   |   Update On 2023-11-05 07:39 GMT
  • பனை விதை நடவு விழா நடந்தது.
  • முடிவில் பேராசிரியர் கருப்புராஜ் நன்றி கூறினார்.

காரைக்குடி

சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விசாலயன்கோட்டை கிராம ஊராட்சி இணைந்து சேது பாஸ்கரா கல்விக் குழுமத்தலைவர் முனைவர் சேதுகுமணன் ஏற்பாட்டில் ஆயிரம் பனை விதைகள் நடவு விழா நடைபெற்றது.

விசாலயன்கோட்டை வேதமுத்து நகரில் தொடங்கி வேளாண்மைக் கல்லூரி வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சொர்ணம் வரவேற்றார்.

சேதுபாஸ்கரா கல்லூரி முதல்வர்.க.கருணாநிதி, சேது வள்ளியம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் சேது விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். கல்லல் ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், முன்னாள் தலைவர் அசோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பனை மரத்தின் சிறப்புகள், பனை விதை நடவு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதன்மை செயல் அதிகாரி கோவிந்தராம், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகேசன், பேராசிரியை விஷ்ணுபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் கருப்புராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News