உள்ளூர் செய்திகள்

மருந்தாளுநர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

Published On 2023-05-20 08:25 GMT   |   Update On 2023-05-20 08:25 GMT
  • மருந்தாளுநர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
  • நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை தொடங்கப்பட்டு 11 ஆண்டுகளாகிறது. இங்கு வெளி நோயாளிகள் பிரிவு, 300 படுக்கையறைகள், அவசர சிகிச்சை பிரிவு, தாய்-சேய் நல பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் உள் நோயாளிகளாக ஆயிரத்தி ற்கும் மேற்பட்டோரும், வெளி நோயாளிகளாக 1200க்கும் மேற்பட்டோரும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள புதுக்கோட்டை, ராமநாத புரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்குள்ள வெளிநோயாளிகள் பிரிவில் மருந்து, மாத்திரைகள் வழங்க ஒரு இடம் மட்டுமே உள்ளது. அதிலும் 5 பேரும் மட்டுமே மருந்தாளுநராக பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு 14 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில் 5 பேர் மட்டும் பணிபுரிவதால் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

எனவே சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News