உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை பேரணிைய நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை பேரணி

Published On 2023-04-22 08:49 GMT   |   Update On 2023-04-22 08:49 GMT
  • சிவகங்கை அருகே நடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை பேரணியை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.
  • விலையில்லாப் பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது.

சிவகங்கை

சிவகங்கை நாலு கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ''நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் நம் எதிர்காலத்தை திட்டமிடுவோம்'' என்ற தலைப்பில் மாணவ-மாணவிகள் ஊர் முழுவதும் விழிப்புணர்வு பேரணியாக சென்று கோஷமிட்டனர்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நாலுகோட்டையில் மாணவர் சேர்க்கை பேரணி ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் தலைமை யில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆனந்தி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் கனிமொழி, தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள் பாப்பா வெள்ளத்தாய், பஞ்சுராஜ், லட்சுமி, ஜெகதாம்பிகை முன்னிலை வகித்தனர்.

இதில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் கூறியதாவது:-

இந்த பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காற்றோட்டமான கட்டிடம், சுகாதாரமான கழிவறை, தொழில் நுட்ப உதவியுடன் கல்வி கற்க கணினி வசதி, மின் வசதி, கியூ.ஆர். கோடு மற்றும் படவிளக்க தொலைக்காட்சியுடன் கல்வி சேனலில் கற்றல்- கற்பித்தல் வசதி உள்ளது.

ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி, சரளமாக வாசிப்புத் திறனை வளர்க்க செய்தித்தாள், தேன்சிட்டு, நூலகம் வாசிக்கும் வசதி, ஆரோக்கியமாக கல்வி கற்க காலை உணவு, மதிய சத்துணவுத் திட்டம், பல்கலைத் திறன் வளர்க்க இலக்கிய மன்றங்கள், சிறார் திரைப்படம், வானவில் மன்றங்கள், கலைத் திருவிழா போட்டிகள், வென்றவர்களுக்கு வெளிநாடு கல்விச் சுற்றுலா செல்ல வாய்ப்பு, மாலை நேர கல்வி கற்க இல்லம் தேடிக் கல்வி, எதிர்கால கல்வி வழிகாட்டுக்கு நான் முதல்வன் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர வருவாய் மற்றும் சிறப்பு கல்வி திட்டம் விலையில்லா சீருடைகள், விலையில்லா காலணிகள், விலையில்லாப் பாடப் புத்தகம் விலையில்லா புத்தகப்பை வழங்கப்படுகிறது.

வண்ணம் தீட்ட கலர் பென்சில் கிரையான்சுகள், நோட்டுகள், கணித உபகரண பெட்டிகள், நில வரைபடங்கள் பயிற்சி ஏடுகள், கணித செயல் பாடுகளை புதுப்பிக்க மகிழ் கணிதம்நிகழ்வு, கல்வி இணைச் செயல்பாடுகள் மூலம் பெண் குழந்தை களுக்கு யோகா, விளை யாட்டு, ஓவியம் மூலம் பன்முகத்திறன் வளர்க்கும் பயிற்சி, ஆடல், பாடல் விளையாட்டின் மூலம் 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி, 4.5 வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி வழியில் கற்பித்தல், 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்க ளுக்கு படைப்பாற்றல் கல்வி முறையில் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆரம்பக் கல்வி முதல் அரசு பள்ளியின் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் உள் ஒதுக்கீடு, மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு, பல்கலைக் கழகங்களில் மாதம் ரூ.ஆயிரம் ஊக்க ஊதியம் என எல்லா வசதிகளும் நிறைந்த அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்திடுவோம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி இந்த பேரணி சிறப்பாக நடந்தது.

இதையடுத்து 15 பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நமது பள்ளி யில் சேர்ந்து படிக்க உறுதி அளித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News