புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
- புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
- 16 பேர் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெறுகின்றனர்
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் கலை யரங்கில் நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினர் களாக சோகோ நிறுவனத் தலைவர் பத்ம ஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, பூமி குழுமம் பன்னாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெய்குமார், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.ரவி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
விழாவில் 465 மாண வர்கள்,379 மாணவிகள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற உள்ளார்கள்.இதில் 16 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று தங்கப் பதக்கம் பெற இருக்கிறார்கள்.பிற்பட்ட கிராமப்புற இளையோர் நலன் கருதி 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி இன்று இளங் கலையில் 19 பிரிவு களும், முதுகலையில் 7 பிரிவுகளும் உள்பட ஆய்வுப்பிரிவு, கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகியவையுடன் சிறப்பாக கல்வி பணியாற்றி வருகிறது.
பட்டமளிப்பு விழா விற்கான ஏற்பாடுகளை பள்ளிக்குழு தலைவர் கிருஷ்ணன்,முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் சுவாமிநாதன்,பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா, முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.