விதிகளை மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றம்-பொதுமக்கள் புகார்
- விதிகளை மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
- ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
இளையான்குடி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் கடந்த 2 நாட்களாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் படி ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது. கண்மாய் கரையில் இருந்து சாலையூர் பகுதி முழுவதும் இருந்த ஆக்கிர மிப்புகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப் பட்டன.
இளையான்குடி தாசில் தார் கோபிநாத், நெடுஞ் சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராகிம் ஷா, உதவி பொறியாளர் முரு கானந்தம், சாலை ஆய்வா ளர்கள் ராஜ்குமார், செல்வி, இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் முன்னி லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ஆனால் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்று வதில் வருவாய் துறையினர் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அளவீடுகள் சரியாக செய்யப்படாமல் கட்டிடங் கள் இடிக்கப்படுவதாகவும் பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். மறு அளவீடு செய்து ஆக்கிர மிப்புகள் அகற்ற வேண்டும் என்றனர்.