கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்காத உறுப்பினர்கள் நீக்கம்
- திருப்புவனம் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்காத உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.
- கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மானாமதுரை
திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனியம்மாள், சரக முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், விரிவாக்க அலுவலர் அமுதா மற்றும் சங்கத்தின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சங்க மேலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. திருப்புவனம் ஒன்றியம் கீழராங்கியத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்த உறுப்பினர்கள் மற்றும் சங்கத்துக்கு நீண்டகாலமாக பால் வழங்காத உறுப்பினர்களை சங்கத்திலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் இயக்குநர் முருகேசன் நன்றி கூறினார்.