உள்ளூர் செய்திகள்

காளையார்கோவில் அரசு பள்ளி வளாகதத்தில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் மரக்கன்று நடுதலை தொடங்கி வைத்த காட்சி. அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் பலர் உள்ளனர்.

மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-10-06 07:56 GMT   |   Update On 2022-10-06 07:56 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
  • இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அதனை முறையாக பராமாிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளையின் சார்பில், கல்வி நிறுவனங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் இயக்கம் செயல்படுத்திட திட்டமிடப்பட்டது.

அதன் தொடக்கமாக காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு ''பசுமை தமிழகம்'' திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவர்கள் மணிவண்ணன், காமாட்சி சந்திரன், ராசு, குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், சத்தியன், ராஜேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News