சிங்கம்புணரி பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு
- சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
- அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் தலைமையில் செயல் அலுவலர் ஜான்முகமது முன்னிலையில் கூட்டம் நடந்தது.
இதில் பேரூராட்சியின் தற்போதைய கட்டிடம் பழைமையான கட்டிடம் என்பதாலும், அங்கு போதிய இடவசதி இல்லாத கார ணத்தாலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் சீரணி அரங்கம் பகுதியில் தேர்வு செய்யப்படுவதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக நடைபெற்ற ஆேலாசனை கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. நகர செயலாளர் வாசு பேசும்போது, புதிய பேரூராட்சி கட்டிடத்தை தவிர வர்த்தக பயன்பாட்டிற்காக வேறு எந்த ஒரு கட்டிடமும் கட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி நிர்வாகி களும் பேசினர்.
கூட்டத்தில் சிறுவர் பூங்கா அருகே மஞ்சு விரட்டு மணி செய்யும் தொழிலாளர்களை மாற்று இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க. நிர்வாகி விடுத்தார். அதற்கு தி.மு.க. கவுன்சிலர் மணிசேகரன் கூறும்போது, சிங்கம்புணரி நகருக்கான கோவில் ஊழியம் செய்யும் சிறு தொழில் செய்யும் அவர்களின் வாழ்வா தாரத்தை நசுக்ககூடாது. அவர்களுக்கு அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். உடனே பேரூராச்சி தலைவர் அவர்களுக்கு நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.