உள்ளூர் செய்திகள்

கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-16 08:14 GMT   |   Update On 2023-06-16 08:14 GMT
  • தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி கடையடைப்பு-ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கியது. 1 லட்சம் வாக்காளர்களை கொண்ட நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை களை கொட்ட ரஸ்தா சாலையில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் குப்பைகளை கொட்ட அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக குப்பை களை கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது:-குப்பைகள் கொட்டும் விவகாரம் தொடர்பாக கலெக்டர், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. கடந்த 6 மாதங்களாக தேவகோட்டை நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு உருவாகி உள்ளது.

நகராட்சிக்கு ஒதுக்கப் பட்ட தேவகோட்டை ரஸ்தா பகுதிகளில் குப்பைகளை ஒதுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அந்த இடத்தை தயார் செய்து தரவில்லை.

இதை கண்டித்து தேவகோட்டையில் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) கடையடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பின்பும் தீர்வு எட்டப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News