உள்ளூர் செய்திகள்

முகாம்

பயனாளிகளை தேர்வு செய்ய நாளை சிறப்பு முகாம்

Published On 2022-06-09 09:42 GMT   |   Update On 2022-06-09 09:42 GMT
  • 68 கிராமங்களில் பயனாளிகளை தேர்வு செய்ய நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
  • துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மேலும் புதிய திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வை நடத்த உள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம பஞ்சாயத்துக் களிலும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் 5 ஆண்டு காலத்திற்குள் சுழற்சி முறையில் அனைத்து பஞ்சாயத்துக்களிலும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நல திட்ட பணிகள் திட்டமிடப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு முதல் கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த மொத்தம் 68 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்களில் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, மகளிர்திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, நீர்வள ஆதாரத் துறை, மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சித்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த சிறப்பு நலத்திட்ட முகாம் நடத்துகின்றன. இந்தமுகாம் நாளை (வெள்ளிக்கிழமை) 68 கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெறுகிறது.

இந்த முகாமில் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு மேலும் புதிய திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வை நடத்த உள்ளனர். எனவே, இந்த முகாம்களில் தொடர்புடைய கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News