உள்ளூர் செய்திகள்

சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்துரையாடினார். அருகில் மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவி திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலைமையாசிரியர் கலாநிதி உள்ளனர்.

உயர்கல்வி கற்பது குறித்து சிறப்பு வகுப்புகள்

Published On 2022-07-08 09:20 GMT   |   Update On 2022-07-08 09:20 GMT
  • உயர்கல்வி கற்பது குறித்து வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி ஆசிரியா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்.
  • மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

அங்குள்ள வகுப்பறை, சமையற்கூடம், தொழிற்பயிற்சி கூடம், ஆய்வகக்கூடம், பணியாளர்கள் அறை, பதிவறை போன்றவற்றை பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்தார். பின்னர் மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-

பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பாடங்களில் சேரும் தருணத்தில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்த கல்வி நிலையங்களில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் சரியாக புரியவில்லை என்றால் மீண்டும் அதற்குரிய விளக்கத்தை கேட்டு அறிந்து புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்வது நீண்ட நாட்களுக்கு பயன்படாது. சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு காலங்களில் மட்டுமே படிப்பது என்ற எண்ணத்தை தவிர்த்து தினந்தோறும் பாடங்களை படிக்க வேண்டும். மாணவர்கள் படிக்க விரும்பும் பட்டப்படிப்பினை திட்டமிட்டு விடாமுயற்சியுடன் கல்வி கற்கும் பட்சத்தில் வெற்றி எளிதாகும்.

அரசுப்பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்களது திறமையினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவம், பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு பாடத்தில் உள்ள உயர்கல்வி என்ன என்பது குறித்தும், சிறந்த கல்வி நிலையங்கள் உள்ள இடங்கள் குறித்தும், மாணவர்கள் அறியும் வகையில் வாரத்திற்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களது வீட்டுச்சூழ்நிலை வேறுபடும். ஆகையால் ஆசிரியர்கள் அனைவ ரையும் அர வணைத்து புரியும்படியான பாடத்திட்டங்களை தொகுத்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News