உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்

Published On 2022-09-28 08:23 GMT   |   Update On 2022-09-28 08:23 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் 12-ந் தேதி நடக்கிறது.
  • சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளில் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில்; (பதின்மப் பள்ளிகள் உள்பட) படித்து வரும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை), அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியவை) படித்து வரும் மாணவர்களுக்கும் வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை)சிவகங்கை மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் பற்கேற்று வெற்றி பெறும் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

அத்துடன், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் இருவரை தேர்வு செய்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்; வழங்கப்படும்.

இந்த போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று, சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, 04575-241487 என்ற தொலைபேசி வாயிலாகவே தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News