உள்ளூர் செய்திகள்

ஆவின் பாலகம் அமைக்க மானிய கடன் பெறலாம்-சிவகங்கை மாவட்ட நிர்வாகம்

Published On 2023-10-22 06:50 GMT   |   Update On 2023-10-22 06:50 GMT
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க மானிய கடன் பெறலாம் என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
  • தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல், விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்து டன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக 100 பேருக்கும், கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டவும், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் உறைவிப் பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைக்கவும் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியின ருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம், ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப் படும்.

200 நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யின விவசாய தொழிலா ளர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்க லாம். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News