சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு மானியம்
- சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்பட்டது.
- மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை
இளையான்குடி வட்டா ரம் தோட்டக்கலைத்துறை த் துறையில் தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ் காய் கறி நாற்றுகள், பழக்கன்றுகள் சாகுபடி செய்யவும் மழை நீர் சேமிக்க பண்ணைக் குட்டை அமைக்கவும், மற் றும் விவசாய உரங்கள் இயற்கை உரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தில் நடப்பாண்டில் புதிய திட்ட மாக விவசாய நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி விவசாய நிலமாக மாற்றி மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயம் செய்ய ஏது வாக நுண்ணீர் பாசன கருவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கூரிய திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் தங்களது பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைபடத்துடன் இளையான்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டிய ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.