உள்ளூர் செய்திகள்

காரைக்குடியில் டி 20 கிரிக்கெட் போட்டி

Published On 2023-07-18 07:08 GMT   |   Update On 2023-07-18 07:08 GMT
  • காரைக்குடியில் டி 20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் கோப்பைக்கான 9-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மைதானங்களில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. பரபரப்பான இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணியும் லத்தீப் மெமோரியல் காரைக்குடி அணியும் மோதின. இதில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக டி.சி.பி.எல் அணியின் குணசீலன், பந்து வீச்சாளராக டி.சி.பி.எல் அணியின் ராமச்சந்திரன்ஆல்ரவுண்டராக லத்தீப் அணி வீரர் சுப்பிரமணியன், விக்கெட் கீப்பராக லத்தீப் அணி வீரர் மரகத கார்த்திக், சிறந்த இளம் வீரராக நைட்ஸ் அணி சபரிகிரிசன், சிறந்த பயிற்சியாளர் விருதை டி.சி.பி.எல் அணி வரதராஜனும் தட்டிச் சென்றனர். தமிழ்நாடு ரவுண்ட்ராபின் போட்டிக்கு தேர்வான வீராங்கனை பிரியதர்ஷினிக்கு விருது வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முரளிராஜன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சதீஷ்குமார், தொழிலதிபர்கள் செந்தில்குமார், புரூட்ஷாப் பாலு ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழஙகினர். அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ரவிக்குமார், திருச்செல்வம், சங்கீர்த்தனன், பழனி மற்றும் விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News