ஆசிரியர் தகுதி தேர்வு நாளை ெதாடங்குகிறது
- சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நாளை ெதாடங்குகிறது.
- மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 கணினி வழியில், நாளை (3-ந்தேதி) முதல் 8-ந் தேதி வரை முதற்கட்டமாகவும் (ேபட்ச்-1),இ 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 2-வது கட்டமாகவும் (ேபட்ச்-2), 2 கட்டங்களாக காலை 9 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.
திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரி, காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியர் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் நாளில் காலையில் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 7.30 மணிக்கும், மதியம் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 12.30 மணிக்கும் வருகை தர வேண்டும். மேலும் காலை 8.15 மணிக்கு பின்னரும், மதியம் 1.15 மணிக்குப் பின்னரும் வருகை தரும் தேவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.