உள்ளூர் செய்திகள்

வீடுகள் தோறும் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி

Published On 2023-09-03 06:03 GMT   |   Update On 2023-09-03 06:03 GMT
  • வீடுகள் தோறும் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக நடந்து வருகிறது.
  • ரூ.25 முதல் ரூ.200 வரை கிடைக்கிறது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாராகும் மண்பாண்ட பொருட் கள் உலகப் புகழ்பெற்றது ஆகும். இசை கலைஞர்களால் உலக அரங்கில் ஐ.நா. சபையில் மானாமதுரை மண்ணில் செய்யபட்ட கடம் வாசித்தது மானாமதுரைக்கு மேலும் புகழ் சேர்த்தது.

இங்கு தயாராகும் மண் பாண்ட பொருள்கள் உறுதி மிக்கது என்பதால் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து மானாமதுரை மண்ணில் செய்யப்பட்ட பொருட்களை அனைவரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

ஆண்டு முழுவதும் இங்கு மண்பாண்ட பொருட்கள் செய்யப்படுகிறது. ஜனவரி முதல் டிசம்பர் வரை பொங்கல் பானை, அடுப்பு, அக்னி சட்டிகள், மண் பானை, கூஜா, பூந்தொட்டிகள், திருவிழாவிற்க்கு குதிரை மற்றும் சுவாமி சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகள், தீப ஒளி விளக்குகள்,

அகல்விளக்கு கிளியான் சட்டிகள், நட்சத்திர ஓட்டலுக்கு தந்தூரி அடுப்புகள் மற்றும் அலங்கார மண் விளக்குகள், கலைநயம் மிக்க மண்சிலைகள் செய்யப் பபட்டு தமிழகம் முழுவதும் அனுப்பபட்டு வருகிறது.

தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் வீடுகள் தோறும் வித, விதமான விநாயகர் சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் கற்பக விநாயகர், ஆனந்த விநாயகர், இலை விநாயகர், என வித வித மாக, வண்ணமயமாக சிலை கள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுமார் 50-க்கும் மேற் பட்ட வீடுகளில் கடந்த இரண்டு மாதமாக விநாயகர் சிலைகள் தயார் செய்து வெளியூர்களுக்கு அனுப்பப் பட்டு வருகிறது. இதேபோல் மிக பெரிய அளவில் தூய்மையான மண் மூலம் மாவட்டத்தில் இங்கு மட் டுமே விநாயகர் சிலை கள் வித விதமாக தயாராகி வருகிறது.

இங்கிருந்து சுமார் 50 விநாயகர் சிலைகள் காரைக் குடி, அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு செல்கிறது. இந்த சிலைகள் விநாயகர் சதுர்த்திக்கு மூன்று நாட்கள் முன்பு அழகிய வடிவமைப்பு கொடுக்கப் பட்டு வர்ணம் பூசி தத்ரூபமாக வேன்களில் கொண்டு செல்லப்படும்.

இதுபற்றி விநாயகர் சிலைகள் தயார் செய்யும் ஆனந்த வள்ளி என்பவர் கூறுகையில், பல ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, பின்னர் நீர்நிலைகளில் கரைத்து விநாயகர் சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்வார்கள். இதற்காக ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் புதிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி வழிபடுவதால் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர் கள் வாழ்வு வளம் பெறுகிறது.

இந்த ஆண்டு பல ஊர்க ளில் இருந்து ஆர்டர்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளது. வெளியூர்க ளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ரூ.25 முதல் ரூ.200 வரை விநாயகர் சிறிய சிலைகள் கிடைக்கிறது. உற்பத்தி விலைக்கு வழங்கு வதால் வியாபாரிகள் நேரடியாக இங்கு வந்து அதிக அளவில் விநாயகர் சிலை களை வாங்கி செல்கின்றனர் என்றார்.

Tags:    

Similar News