உள்ளூர் செய்திகள்

சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது

Published On 2023-04-17 06:57 GMT   |   Update On 2023-04-17 06:57 GMT
  • சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
  • பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கவுள்ள நிலையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.

மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.அதைத் தொடர்ந்து வீர அழகர் கோவிலில் சித்திரை திருவிழா ஆரம்பமாகிறது.

இந்த திருவிழாக்களின் போது மானாமதுரை நகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்குள் பொழுது போக்கு அம்சங்களாக ராட்டினங்கள், திருவிழாக்கடைகள் அமைக்கப்படும். மானாமதுரை பகுதியை சேர்ந்த மக்கள் திருவிழாவை காண வைகை ஆற்றுக்குள் கூடுவார்கள்.

திருவிழாவிற்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் நகர் பகுதி வைகை ஆறு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருவிழாவின் போது பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News