உள்ளூர் செய்திகள்

சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழாவில் எடுத்த படம்.

வைகாசி விசாக விழா

Published On 2022-06-10 09:56 GMT   |   Update On 2022-06-10 09:56 GMT
  • சிவகங்கை அருகே சேவுக பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா நடந்தது.
  • கடந்த 5 -ந் தேதி காப்பு கட்டுதலுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பத்தூர்

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலய வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஐந்தாம் நாளான நேற்று மாலையில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவத்தின் ஒரு நிகழ்வாக மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக மேளதாளத்துடன் பக்தர்கள் முன்னிலையில் ஊஞ்சல் மண்டபத்தில் பூரணா புஷ்கலா உடனுறை சேவுகப்பெருமாள் அய்யனார் ஊஞ்சலில் எழுந்தருளினார்.

அதைத்தொடர்ந்து மாப்பிள்ளை தோழனாக அஸ்ர தேவர் எழுந்தருளினார். ஊஞ்சல் பாடல்கள் பாடப்பட்டு மாப்பிள்ளை தோழனான அஸ்ரதேவர் மற்றும் சேவுகப்பெருமாள் அய்யனார் மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது.

பக்தர்கள் குலவை ஒலி முழங்க மாலை மாற்றுதல் நிகழ்வை சிவாச்சாரியார் நடத்தினர்.அதைத்தொடர்ந்து திருக்கோவில் திருமண மண்டபத்தில் சுவாமி சேவுகப்பெருமாள் அய்யனார் எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க பூரண புஷ்கலை தேவியர் ஆகிய இருவருக்கும் மாங்கல்ய தாரணம் அணிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம், சிங்கம்புணரி அடைக்கலம் காத்த நாட்டர்கள், மூவலப்பெரியார் வகையறாக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News