- ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- விவசாயிகள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெ றுவதற்காக இந்த கருந்த ரங்கானது நடத்தப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் உயர்சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
இதில் மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, திருப்புவனம், காளை யார்கோவில் ஆகிய வட்டா ரங்களை சேர்ந்த 50 விவசாயி களுக்கு தோட்டக்கலை இயக்கம் 2023-24 திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறை, வெங்காயம் சேமிப்பு கிடங்கு, பண்ணை குட்டை, மண்புழு உரக்கூடம், நிரந்தர பந்தல் ஆகியவற்றுக்காக ரூ.37.72 லட்சம் மதிப்பீட்டில் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
உலகளவில் பல்வேறு நாடுகளில் போதிய சூழல் மற்றும் இடவசதியின்றி தாங்கள் வசித்து வரும் வீட்டின் மாடி புற பகுதியில் தோட்டத்திற்கான மாதிரியினை ஏற்படுத்தி, அதன் மூலம் நெற்பயிர் போன்ற பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர், அதற்கு மாற்றாக இயற்கை யான சூழல் மற்றும் மண்வ ளத்தினை பெற்றுள்ள நாம், பல்வேறு வகையான தோட்டப் பயிர்களை மண்வளத்திற்கு ஏற்றாற்போல் பயிர் செய்து பயன்பெற வேண்டும்.
இன்றைய நவீன காலத்திற்கேற்றாற்போல், விவசாய தொழிலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாம் முன்னேற்றம் காண வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துவதற்கும் உரிய விலை கிடைக்கும் வரையில் அதனை முறையாக சேமிப்பதற்கும் அரசால் பல்வேறு வழி வகைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பங்கள் ஆகியன குறித்து, விவசாயிகள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெ றுவதற்காக இந்த கருந்த ரங்கானது நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) செ. சக்திவேல், சிவகங்கை வேளாண் துணை இயக்குநர் பழ. கதிரேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடி, வேளாண் விஞ்ஞானிகள், மற்றும் அனைத்து வட்டார தோட்டக்கலை துறைசாந்த அலுவலர்கள், மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.