உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-15 07:58 GMT   |   Update On 2022-12-15 07:58 GMT
  • இளையான்குடி அருகே ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அ.நெடுங்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.30.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 194 பயனாளிகளுக்கு வழங்கி னார். பின்னர் அவர் பேசிய தாவது:-

முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து அதில் உள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்க மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத்துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News