உள்ளூர் செய்திகள்

இளையோர் திருவிழா போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

Published On 2022-09-23 06:58 GMT   |   Update On 2022-11-09 07:39 GMT
  • இளையோர் திருவிழா போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் இந்த விழா நடைபெற உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும் சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா நடத்தும் மாபெரும் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா விரைவில் நடைபெற உள்ளது.

நேரு யுவகேந்திரா ஆண்டுதோறும் இளைஞர்களின் ஆற்றல்மிகு திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் இளையோர் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மாவட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் நிறைவடையும். இந்த வாய்ப்பை சிவகங்கை மாவட்ட இளைஞர்களும், மாணவ- மாணவிகளும் பயன்படுத்தி திறமைகளை வெளிப்படுத்தலாம்.

1)இளம் எழுத்தாளர் போட்டி கவிதை, 2) இளம் கலைஞர் போட்டி ஓவியம், 3)கைபேசி புகைப்பட போட்டி, 4)பிரகடன பேச்சுப்போட்டி, 5)இளையோர் சொற்பொழிவு, 6)கலைத்திருவிழா ஆகியப் போட்டிகள் நடைபெறுகின்றன. வயது வரம்பு 15 முதல் 29 வரை இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

வரிசை எண் 1 முதல் 3 வரை உள்ள போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.1,000, 2-ம் பரிசு ரூ.750, 3-ம் பரிசு ரூ.500, பிரகடன போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1,000, கலைப்போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2,500, 3-ம் பரிசு ரூ. 1,250.

இளையோர் சொற்பொழிவு நிகழ்வில் சிறப்பாக செயல்படும் 4 இளைஞர்களுக்கு தலா ரூ.1,500-, வீதம் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி இடங்களை பிடித்த இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதியுடைவர்கள் ஆவார்கள். பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். முன்பதிவிற்கு முன்பதிவு செய்ய கடைசி நாள்-26.9.2022 மாலை 5 மணி ஆகும்.

மேலும் தகவலுக்கு - 95664 53901, அலுவலகம்-04575 290399 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News