தமிழ்நாடு
சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வுமையம்
- கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்றார்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.
மழைப்பொழிவை பொருத்தவரை இதே நிலை நீடிக்கும். விட்டு விட்டு கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
நாளை சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.