தமிழ்நாடு

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

Published On 2024-11-13 11:38 GMT   |   Update On 2024-11-13 11:38 GMT
  • மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கும் பணியின்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கொல்கத்தா ஆர்.ஜி. கெர் மருத்துவமனை சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சையை தவிர்த்த மற்ற சிகிக்சைகள் அளிக்க மறுத்துவிட்டனர்.

பிறகு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் போரட்டம் நடத்திய மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதிலும் டாக்டர்கள் கலைந்த செல்ல மறுத்துவிட்டர்.

13 கோரிக்கைகளை வலிறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அரசு மருத்துவ சங்கத்தினருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை 4 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, துறை செயலாளர் சுப்ரியா சாகு, மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மேலும், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மருத்துவ அலுவலர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து மருத்துவ சங்கங்களுடன் ஆலோசனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News