நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இலங்கை தமிழர்கள் முகாம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
- 40-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
- பேட்டை பகுதியை சேர்ந்த பெனாசீர் பாத்திமா பயிற்சியினை நடத்தினார்.
நெல்லை:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அவற்றுள் ஒன்றாக இன்று அரசு அருங்காட்சி யகத்தில் நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரம் மற்றும் கங்கை கொண்டான் பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்களுக்கு வாழ்வாதார திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
இப்பயிற்சியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியினை பேட்டை பகுதியை சேர்ந்த பெனாசீர் பாத்திமா நடத்தினார்.
நிகழ்ச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சார்ந்த தங்கேஸ்வரன், லோகேஸ்வரன், குணசீலி வாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.