கல்லூரி, பள்ளி விடுதிகளில் வாரத்தில் ஒரு முறை சிறுதானிய உணவு:-கலெக்டர் அறிவுறுத்தல்
- மாவட்ட அளவிலான சிறுதா னியங்கள் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
- பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், உணவுத் திருவிழாக்கள் போன்றவை நடத்தப்பட வேண்டும்.
தருமபுரி,
2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக இந்தியாவின் கோரிக்கை ஏற்று ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட அளவிலான சிறுதா னியங்கள் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அரசினால் தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் சிறுதானிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் சிறுதானிய உணவுகள் அன்றாடம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் 2023ஆம் ஆண்டு முழுமைக்கும் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய சிறுதானியங்கள் தொடர்பான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அனைத்திலும் 2023ஆம் ஆண்டு முழுமைக்கும் சிறுதானிய தொடர்பான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், உணவுத் திருவிழாக்கள் போன்றவை நடத்தப்பட வேண்டும்.
அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய உணவு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொழில்முறை சமையற்கலைஞர்களை அழைத்து அவர்கள் சமையல் செய்யும் திருமண விழாக்களில் சிறுதானிய உணவு பண்டங்கள் வழங்க உரிய பயிற்சி வழங்க வேண்டும்.
மேலும் சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டு விளைப்பொருட்கள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் சாமிநாதன், தோட்டக்கலை துணை இயக்குநர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணை ப்பாளர் வெண்ணிலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன் மற்றும் மாவட்ட அளவிலான இதர துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.