மேட்டுப்பாளையம் அருகே வீட்டின் முன் நடனமாடிய சாரைபாம்புகள்
- இந்த கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
- இப்பகுதியில் உள்ள ஓடையை சுற்றி முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ளது பட்டக்காரனூர் கிராமம். இந்த கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இக்கிராமத்தினை சுற்றி விளைநிலங்கள் உள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள ஓடையை சுற்றி முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த புதர்களில் இருந்து அவ்வப்போது அதிகளவில் பாம்புகள் குடியிருப்புகளில் நுழைந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகின்றன.
இதனிடையே பட்டகாரனூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முன்பு நேற்று மாலை 2 சாரை பாம்புகள் பின்னி பினைந்து நடனமாடியது. இதனையறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.
வீட்டின் வாசல் முன்பு 2 பாம்புகளும் நடனமாடி கொண்டு இருப்பதை கண்டு அப்பகுதியினர் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சென்று வேடிக்கை பார்த்து சப்தம் எழுப்பியும் கூட அதனை பொருட்டாக நினைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த வீட்டின் சுவர் பகுதியிலேயே நடனமாடியாது.
இதனை அந்த பகுதி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து சென்றனர். கடந்தாண்டும் இதே பகுதியில் சாரை பாம்புகள் நடனமாடியது. இந்த நிலையில் தற்போது பாம்புகள் நடமாடியது அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.