உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி. 

உடுமலையில் மண் வளம் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி 18-ந்தேதி நடக்கிறது

Published On 2022-06-15 05:06 GMT   |   Update On 2022-06-15 05:06 GMT
  • உடுமலைப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து கிராம விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் விளக்கஉரை அளித்தார்.
  • இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 60 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.

உடுமலை : 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் உடுமலை லட்சுமி ஜூவல்லர்ஸ்நகைக்கடை மாடியில் நடந்தது. இதில் உடுமலைப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து கிராம விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் விளக்கஉரை அளித்தார் .பின்பு மண் வளம் பாதுகாப்பு குறித்த குறும்படம் அனைவருக்கும் காட்டப்பட்டது.

இதில் ஒவ்வொரு நொடியும் ஒரு ஏக்கர் நிலத்தின் மண் பாலைவனம் ஆகிறது. 62 சதவீதம் மண்வளம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 60 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது .இந்தியாவின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் பாலைவனமாக மாறி வருகிறது எனஅவர் தெரிவித்தார். மேலும் சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும் அதற்கான விழிப்புணர்வு பிரச்சார பயணத்திற்காகவும் உடுமலைப்பேட்டையில் இருந்து பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் மாபெரும் வாகன பேரணி வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது எனவும் இதற்கு அனைத்து பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு அளித்துள்ளது .மேலும் ஐநா.வின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும், சர்வதேச விஞ்ஞானிகள் உட்பட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர் .இதேபோல் தமது பகுதியிலும் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தரவேண்டும் எனஈஷா யோகா மையம் சார்பில் பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கேட்டுக்கொண்டனர். 

Tags:    

Similar News