பள்ளியில் தொலைநோக்கி மூலம் விண்வெளிப்பயணம் நிகழ்வு
- மாணவர்களால் உருவாக்கப்பட்ட உயர்திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
- தொலைநோக்கியின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும், விளக்கங்களையும் மாணவர்களுக்கு விளக்கினார்.
சீர்காழி:
சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியில் சாராபாய் விண்வெளி கழகத்தின் சார்பில் அதிநவீன தொலைநோக்கி மூலம் சிறப்பு விண்வெளி காணொளி காட்சி பள்ளியில் இரண்டாவது முறையாக நடைபெற்றது.
இந்த பள்ளி மாணவ- மாணவிகளால் உருவாக்கப்பட்ட உயர் திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் இரவில் அனைவரும் முழு சந்திரனையும் விண்வெளி கோள்கள் மற்றும் கிரகங்களையும் கண்டு வியப்புற்றனர். சங்கத்தின் முதல் கூட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சங்கத்தின் வழிகாட்டியும் இஸ்ரோ விஞ்ஞானியுமான இங்கர்சால், தமிழ்நாடு அறிவியல் பேரவை தலைவர் விழிநாதன் மற்றும் ராஜேந்திரன் கலந்து கொண்டு விண்வெளியில் அதிசயங்களையும் தொலைநோக்கின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும் அதற்கான விளக்கங்களையும் மாணவ -மாணவியர்களுக்கு விளக்கி அவர்களின் சந்தேகங்களை அறிவியல் பூர்வமாக தெளிவுபடுத்தினர்.
இது போன்ற விண்வெ ளியை, தொலைநோக்கி மூலம் பார்க்கும் நிகழ்வுகள் மாதம் ஒருமுறை விண்வெளியை காணும் உகந்த நேரங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளியின் தாளாளர் சுதீஷ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வித்யா, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி அன்பழகன் கலந்து கொண்னர்.
சுபம் வித்யா மந்திர் பள்ளி சாராபாய் விண்வெளி சங்கத்தின் தலைவர் மாணவர் விஷ்வந்த், 9-ம் வகுப்பு மற்றும் மாணவர் மணிகண்டன் ஆகியோர் முதுகலை ஆசிரியர் ரியாஸ் மற்றும் முதுகலை ஆசிரியர் சுப்ரமணியம் ஆகியோரின் வழிகாட்டலில் கழக உறுப்பினர்களை கொண்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.