உள்ளூர் செய்திகள்

நவ்வலடியில் ஆக்சிசன்லைன் அமைக்கும் பணியை சபாநாயகர் அப்பாவு தொடங்கிவைத்தபோது எடுத்த படம். அருகில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணக்குமார் உள்பட பலர் உள்ளனர்

நவ்வலடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிசன் பைப்லைன் அமைக்கும் பணி- சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

Published On 2022-09-14 08:51 GMT   |   Update On 2022-09-14 08:51 GMT
  • நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 19 லட்சத்தில் 15ஆயிரம் செலவில் காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிசன்லைன் அமைப்பதற்கான திட்டபணிகள் தொடக்கவிழா நடந்தது.
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வசதிகள் கடைகோடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்க வேண்டும்

திசையன்விளை:

நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 19 லட்சத்தில் 15ஆயிரம் செலவில் காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிசன்லைன் அமைப்பதற்கான திட்டபணிகள் தொடக்கவிழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகர பகுதி களில் உள்ள மருத்துவமனை களில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வசதிகள் கடைகோடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிசன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், ராதாபுரம் யூனியன் ஆணையாளர் பிளாரன்ஸ் விமலா சமுக சேவகர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News