தென்காசி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
- கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- முகாமில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. முகாமில் விண்ணப்பித்தல், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, வங்கி கடன், சுய தொழில் தொடங்குதல், பாதுகாப்பு தொடர்பான 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. முகாமில், மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, துணை கலெக்டர் (பயிற்சி) கவிதா, சகி-ஒன் ஸ்டாப் சென்டர் மையநிர்வாகி ஜெயராணி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் சதாசிவன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வீரவேல், கூட்டுறவுத் துறை மேலாளர் ரெனிஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஊர்நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.